Header Ads



ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம்

ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோபோக்கள் (எந்திர மனிதன்) பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது படுக்கைக்கே சென்று ஆழ்ந்து தூங்குபவர்களை எழுப்பும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை ரோபோ, அலாரம் வைக்கப்பட்ட நேரத்தில் கீழே இருந்து மேலே குதித்து படுக்கையின் ஓரத்தில் இருக்கும் டேபிளில் உட்காருகிறது. பின்னர் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்கள் காதருகில் பயங்கர சத்தத்துடன் அலாரம் அடிக்கிறது. அதற்காக இந்த ரோபோ மிகவும் விசேஷமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அது தூங்குபவரின் படுக்கைக்கு வர வசதியாக சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை 3 அடி உயரம் வரை எழும்பி தாவக்கூடியவை. தூங்குபவர் எழுந்து அதன் சுவிட்சை அணைக்கும் வரை அதாவது ஆப் செய்யும் வரை அலாரம் அடிப்பது நிற்காது. அதன் விலை ரூ.3,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.