ஆப்கானிஸ்தானில் கழுதையின் மீது அமர்ந்துவந்து தற்கொலை தாக்குதல் - 3 படையினர் பலி
கிழக்கு ஆப்கானிஸ்தான், வர்டான் மாகாணத்தில் நேட்டோ படைகள் மீது கழுதை மீது ஏறிவந்த மனித வெடிகுண்டு நடத்திய தற்கொலை தாக்குதலில் 3 நேட்டோ வீரர்கள் பலியாகினர். தலைநகர் காபூலின் தெற்கு பகுதியில் உள்ள வர்டான் மாகாணத்தில் நேட்டோ படை வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன.
அப்போதுஇ சாலையோரம் கழுதை மீது ஏறி அமர்ந்து வந்த தலிபான் ஆயுததாரி திடீரென்று கழுதையை அதட்டிஇ விரட்டி வேகமாக ஓட வைத்து நேட்டோ வாகனங்கள் மீது மோதினார்.
இந்த தாக்குதலில் 3 நேட்டோ வீரர்கள் பலியாகினர். கழுதையும் அதன்மீது அமர்ந்து வந்த மனித குண்டுவாதியும் இச்சம்பவத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதி தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த முக்கிய பகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment