எகிப்தில் 300 இஹ்வான்களுக்கு பிடியாணை உத்தரவு
(Tn) முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணித் தலைவர்கள் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டதை பாதுகாப்புத் தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சியின் தலைவர் சாத் அல் கதத்னி, மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் துணைத் தலைவர் ரஷாத் பயூமி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மறுபுறத்தில் 300 இஸ்லாமியவாதிகளைக் கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக எகிப்து பத்திரிகையான அல் அஹ்ரம் செய்தி வெளியிட்டுள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை எகிப்து உள்துறை அமைச்சு ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு உறுதி செய்துள்ளது. இதில் கதத்னியின் வீட்டுக்கு சிவில் உடையில் வந்த ஒருசிலர் அவரை அழைத்துச் சென்றதாக சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அவர் எங்கே கொண்டு செல்லப்பட்டார் என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஏனைய முன்னணித் தலைவர்கள் தனது தொலைபேசி தொடர்புகளை துண்டித்திருப்பதாக ஏ. எப். பி. குறிப்பிட்டுள்ளது.
.jpg)
Post a Comment