Header Ads



மதிய உணவு சாப்பிட்ட 20 மாணவர்கள் மரணம் - 35 பேர் உயிருக்கு போராட்டம்

(India) பீகாரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பீகார் மாநிலம் சரண் மாவட்டம், தர்மாசதி கந்தாவான் கிராமத்தில் உள்ள, அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நேற்று மதியம் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயா பீன்ஸ் கலந்த மதிய உணவு வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்டதும், மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அனைவரையும் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக சாப்ரா நகர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று 11 மாணவர்கள் பலியாயினர். இந்நிலையில் இன்று வரை பலியான மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதால் , பீகாரில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 48 மாணவர்களுக்கு பாட்னா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். அத்துடன், விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. kasi kodutha pona usuru thirimbiwaruma nalla sistath kandupidichikuranaga usuru pona kasi masiru pona annatha kodupano indiya

    ReplyDelete

Powered by Blogger.