தாதியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்
(Samd)
நாடு பூராகவுமுள்ள அரச வைத்தியசாலைகளில் கடமை புரியும் தாதியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை இன்று (17) காலை 7 மணி முதல் ஆரம்பித்துள்ளதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
வழங்கப்படாத சம்பளக் கொடுப்பனவுகளை வழங்கல், உரிய பதவி உயர்வுகளை வழங்கல், முறையற்ற ஆட்சேர்ப்புக்களை நிறுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தக் கோரி இவ்வொரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலை நிறுத்தம் இடம்பெறுகின்ற போதிலும், அவரச சிகிச்சைகளுக்கு மாத்திரம் தாதியர்கள் உதவுவார்கள் என்று குறிப்பிட்டுள்ள குறித்த சங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அவை இது வரை நிறைவேற்றப்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது.
.jpg)
திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் தாதியர்களின் சுகவீனப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.தாய் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தாய்ச்சங்கத்தின் சார்பாக எமது நன்றிகள்.
ReplyDelete