ரம்சான் நோன்பு - நரேந்திர மோடி வாழ்த்து..!
(INNe) ரம்ஜான் நோன்பினைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்களுக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில், ”மகிழ்ச்சிக்குரிய ரம்ஜான். இந்தப் புனித மாதம் மகிழ்ச்சி, அன்பு மற்றும் வளமை ஆகியவற்றை நமக்கு கொண்டு வரட்டும்” என அவர் தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரச்சாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, முஸ்லிம்களின் ஆதரவினைப் பெறுவதற்காக இவ்வாறு வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
”வாக்குகளுக்காக எதனையும் இவர்கள் செய்வார்கள்” என குஜராத் மாநிலக் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த அர்ஜூன் மோத்வாடியா யாருடைய பெயரினையும குறிப்பிடாமல் இதனைக் கண்டித்துள்ளார். ”ராமர் கோவில், முஹம்மத் அலி ஜின்னா ஒரு மதச்சார்பற்றவர், சச்சார் கமிட்டி அறிக்கையினை எரிப்பது, ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்வது” என வாக்குகளுக்காக எதனையும் செய்பவர்கள் இவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரம்ஜான் நோன்பிற்காக அர்ஜூன் மோத்வாடியாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.
.jpg)
Post a Comment