பாலங்களை அபிவிருத்தி செய்யு ஆரிப் சம்சுடீன் வேண்டுகோள்
(எம்.எம்.ஏ.ஸமட்)
அம்பாறை – காரைதீவு பிரதான வீதியிலுள்ள இரு பாலங்களையும் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகயினைத் துரிதப்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆம்பாறை மாவட்டக் கரையோர மக்கள் அதிகம் பயன்படுத்தும் அம்பாறை- காரைதீவுப் பாதையில் உள்ள மாவடிப்பள்ளி சிறிய மற்றும் பெரிய பாலங்கள் எனக் கூறப்படும் இப்பாலங்கள் மிகவும் குறுகியதாகவும் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் சிரமமின்றி பயணிக்க முடியாமலும் வெள்ள மற்றும் மழை காலங்களில் போக்குவரத்து செய்ய முடியாமலும் நீண்ட காலமாக செப்பணிடப்படாமலும் அபிவிருத்தி செய்யப்படாமலும் காணப்பட்டு வருகிறது.
அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளை உத்தியோபூர்வமாக 'செத்சிறிபாயவில்' சந்த்தித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், அம்பாறை மாவட்ட வீதிகளின் தற்போதய நிலை குறித்தும் அம்பாறை – காhரதீவு பிரதான விதியின் இரு பாலங்களின அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் இவ்விரு பாலங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை மாகாணசபை உறுப்பினரின் நடவடிக்கை காரணமாக கல்முனைக்குடி அம்பாறை மாவட்டதின் ஒரிரு கிராமங்களில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கதாகும்
.jpg)
Post a Comment