கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய புத்தக கண்காட்சி
(எம்.எம்.ஏ.ஸமட்)
கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள தேசிய புத்தக கண்காட்சியை இன்று (17) காலை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கல்வி வெளயீட்டுத் திணக்களம் மற்றும் இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் என்பன இணைந்து கல்வி அமைச்சின் வளாகத்தில் ஆரம்பித்து வைத்துள்ள இந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் கல்வி வெளியீட்டுத் திணைககளத்தினதும் இலங்கையிலுள்ள பிரபல புத்தக நிலையங்களினதும் நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் ஏறக்குறை 90 விற்பனை நிலையங்களும் இக்காட்சி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
17ஆம் திகதி மதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாபெரும் புத்தக கண்காட்சியினை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட முடியுமெனவும் தங்களுக்குத் தேவையான நூல்களைக் சகாய விலையில் கொள்வனவும் செய்ய முடியுமென கல்வி வெளியீட்டுத் திணக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன இக்கண்காட்சியை எவ்வித கட்டணமுமின்றி பார்வையிட முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment