YMMA பேரவையின் விருது வழங்கும் விழாவும், புதிய நிர்வாகிகள் தெரிவும்
(ஜே.எம்.ஹபீஸ் + எஸ்.அஷ்ரப்கான்)
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 2013ம் ஆண்டு விருதுவிழாவில் கடநத வருட செயற்பாடுகளின் அடிப்படையில் கண்டி மாவட்டம் 12 விதுகளில் 7 விதுகளை வென்றுள்ளது இதில் கணடடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 7 வருதுகளில் 5 விருதுகளை மடவளை பஸார் வை.எம.ஏ.கிளை பெற்றுக் கொண்டது.
மடவளைக்காக பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மாவட்ட அமைப்பாளருக்கான விருது எம.எஸ்.எம்.ரிஸ்மி, ஊடகவியலாருக்கான விருது சிரேஸ்ட ஊடகவியலாளர் லதீப் பாருக், சிறந்த செயலாளர்ருக்கான விருது ஏ.எம். சலாகுதீன் (நியாஸ்), சிறந்த பாலர் பாடசாலைக்கான விருது, இன நல்லுறவை ஏற்படுததலுக்காக விசேட விருது என்பனவாகும்.
...........................................................
இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வில் பேரவையின் நடப்பு வருடத்திற்கான புதிய அங்கத்தவர்கள் தெரிவு இடம்பெற்றது.
இதன்படி தேசியத்தலைவராக கே.என். டீன், தேசிய பொதுச்செயலாளராக ராஸ்மரா ஆப்தீன், தேசிய பொதுப்பொருளாளராக அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம். நபீல் ஆகியோரும் தெரிவானார்கள்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏ.எம். நபீல் தேசிய பொருளாளராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரை கௌரவிக்கும் வகையில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ. உதுமாலெப்பை பொன்னாடை பேர்த்தி கௌரவித்தார்.

Post a Comment