காத்தான்குடியில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்பூட்டு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ரணசிங்க ஆகியாரின் ஒருங்கினைப்பில் பொது மக்களின் நலன் கருதி நாளாந்தம் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் பாரிய மற்றும் சிறு வீதி விபத்துக்கள் தொடர்பில் வீதியில் பொது மக்களுக்கு விழிப்பூட்டும் விஷேட விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு –கல்முனை –காத்தான்குடி பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள குர்ஆன் சதுக்கத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி.ஜயவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.
இதில் இலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துகளால் இடம்பெறும் உயிர் ஆபத்துக்கள்,தலைக்கவசம் இன்றி பயணிக்கும் போது ஏற்படும் விபத்துக்கள்,வாகனத்தில் கையடக்க தொலைபேசிகளில் கதைத்துக் கொண்டு பயணிக்கும் போது ஏற்படும் விபத்துக்கள்,ஆசனப் பட்டி அணியாமல் பயணிக்கும் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து சட்ட விதிகள் போன்றவை தொடர்பில் பொது மக்களுக்கு புரஜக்டர் மூலம் தமிழ் மொழியில் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயவர்த்தனவினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ரணசிங்க காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள்,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இலங்கையில் இடம்பெறும் வீதி விபத்துக்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் பொது மக்களுக்கு கான்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
.jpg)
Post a Comment