சம்மாந்துறை சிவில் பாதுகாப்பு குழுக்களுடனான சந்திப்பு
(யு.எல்.எம். றியாஸ்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களுடனான
சந்திப்பு ஒன்று இன்று 19.06.2013 சம்மாந்துறை எம்.ஏ . அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 96 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனாக தலைமையில் இடம்பெற்ற இக்கூடத்தில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்,
இதன்போது போலீஸ், பொதுமக்களுக்கு இடையிலான சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்பு தொடர்பாகவும் சமூக ரீதியான பிணக்குகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
.jpg)
Post a Comment