முன்னாள் டச்சு மருத்துவமனை மறுசீரமைப்பு - இரண்டாம் கட்டம் திறந்துவைப்பு!
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
கொழும்பு கோட்டைப் பிரதேசத்தில் உள்ள முன்னாள் டச்சு மருத்துவமனை மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று(21) திறந்துவைத்தார்.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முகமாக மிகவும் முக்கிய வணிகத் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் முன்னாள் டச்சு மருத்துவமனை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் இலங்கை கடற்படையின் உதவியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை 80 மில்லியன் ரூபா செலவில் இந்த வணிகத் தொகுதியை அமைத்துள்ளது.
இன்றைய வைபவத்தில் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ- அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி- கொழும்பு மாநகரசபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


Post a Comment