Header Ads



முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் சந்திப்பு


(அஸ்ரப் .ஏ.சமத்)

முஸ்லீம் கவுண்சில் தலைவர் என்.எம். அமீன் தலைமையிலான தூதுக்குழு அமைச்சர் விமல் வீரவன்சவை நேற்று மாலை செத்;திசிரிபாயவில் உள்ள  அவரது அமைச்சில் வைத்து சந்தித்தனர்.

இச் சந்திப்பில் அமைச்சர் விமல் விரவன்ச கருத்து தெரவிக்கையில் தற்பொமுது நிர்வாகத்தில் உள்ள மாகாணசபையை முறைமையை இல்லாதொழிக்கும் கொள்கையிலேயே எமது கட்சி உள்ளது. சில கட்சிகள் இதற்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் மாகாணசபையில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் கட்டாயம் அகற்றப்படல் வேண்டும். 

மாகாண சபைகளின் முதலமைச்சரே பிரதிப்பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அதற்காகவே முதலில் வடக்கு மாகாணசபையில் தேர்தலைநடாத்துவதற்கு முன் பொலிஸ் காணி அதிகாரம் அகற்றப்பட வேண்டும். எனத் தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்  முஹமட் முசம்மில் முஸ்லீம் கவுன்சில் சார்பில் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ், ஹில்மி முகமட், நியாஸ் மற்றும் உறுப்பினாகளும்   பங்கேற்றனர்.



No comments

Powered by Blogger.