Header Ads



இலங்கையில் முதல்முறையாக செயற்கை தீவு

இலங்கையில்  முதல் முறையாக பொழுதுபோக்கிற்கு செயற்கையான குட்டித்தீவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.  அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு அருகாகவே இந்தக் குட்டித்தீவு உருவாக்கப்படவுள்ளது. 

இலங்கை துறைமுக அதிகாரசபையின் பொறியாளர்களின் வழிகாட்டிலில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இதற்கான சாத்திய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாக, துறைமுக அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

குறைந்தது 5 ஏக்கரில் இந்த குட்டித தீவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.  அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் அடுத்த கட்ட விரிவாக்கப் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. 

சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளும் இந்தத் திட்டத்தை சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. 

இதன்போது, சுமார் 40 ஆயிரம் கியூபிக் மீற்றர் மண் அகழப்படும். இந்த மண் குட்டித்தீவை உருவாக்கப் பயன்படுத்தப்படவுள்ளது.  குட்டித்தீவை உருவாக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர் அது, பொழுதுபோக்கு வசதிகளை செய்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது. 

பணிகள் முடிந்த பின்னர், இதற்கு அனைத்துலக அளவில் கேள்விப்பத்திரங்களை கோரவும் திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும் இது போன்றதொரு துறைமுக நகரை கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் அமைக்கவும் துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.