பதுளையில் பொதுபல சேனாவின் ஆக்கிரமிப்பு - முஸ்லிம் வியாபாரிகளுக்கு பாதிப்பு
(மொஹமட் பாயிஸ்)
பொதுபல சேனாவின் மாநாடு பதுளையில் எதிர்வரும் 15 ம் திகதி பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான பரந்தளவிலான ஏற்பாடுகள் தற்போது பொது பல சேனாவினால் கிராமம், காரியாலயங்கள் மட்டத்திலும், முச்சக்கர வண்டிகள் ஊடாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
பதுளையில் பசு வதையை கண்டித்து பாரியளவிலான சுவரொட்டிகளும், பிரசாரங்களும் ஆங்கங்கே ஒட்டப்பட்டுள்ளது. பொது பல சேனாவின் பிரசார நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம் வியாபாரிகளின் வியாபார ஸ்தம்பித நிலமை கிராம புறங்களுக்கு கூடுதலாக பாதிக்கப்பட்டு வருகிறது.
.jpg)
'முஸ்லிம்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை' என்று ஜனாதிபதி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவித்திருக்கினறாரே...?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-