மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை தலைவருடன் கோத்தா சந்திப்பு
மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை தலைவரான மேஜர் ஜெனரல் அஹமட் ஷியாம் இன்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்துரையாடினார்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை தலைவரும் அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இருதரப்பு நட்புறவுகள் குறித்தும் இந்த நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இருவரும் நினைவுச்சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர். இலங்கை பாதுகாப்புப் படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயும் இதில் கலந்துக் கொண்டார்.


Post a Comment