முஸ்லிம்கள், பௌத்தர்கள் பிரச்சினைகள் - சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தை
அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தர்கள் நடத்திவரும் வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து இரு சமூகங்களுக்கிடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பாங்காக்கில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்-புத்த தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்தியா, மலேசியா, இலங்கை, இந்தோனேஷியா, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த மத தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இண்டர்நேசனல் நெட்வர்க் ஆஃப் என்கேஜ்ட் புத்திஸ்ட்(ஐ.என்.இ.பி), இண்டர்நேசனல் மூவ்மெண்ட் ஃபார் எ ஜஸ்ட் வேர்ல்ட்(ஜஸ்ட்), ரிலிஜீயன்ஸ் ஃபார் பீஸ்(ஆர்.எஃப்.பி) ஆகிய அமைப்புகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டன. தீவிரவாதமும், துவேச பிரச்சாரமும், பிறமதங்களுக்கு எதிரான அவதூறுகளும், பாரபட்சமும் அதிகரித்து வருவதாக கூட்டத்தில் பேசப்பட்டது. முஸ்லிம்-புத்த சமூகங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்று கூட்டம் கருத்து தெரிவித்தது. இவ்விவகாரத்தில் ஆசியான், சார்க், ஐ.நா, ஒ.ஐ.சி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படப்போவதாக தலைவர்கள் தெரிவித்தனர். thoo
.jpg)
இதை செய்யுங்கள் முதலில்......
ReplyDeleteஇந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட்டால் எல்லாமே சரியாகி விடும். இதற்கான முழுப் பொறுப்பும் ராஜபக்ச அன் கோ வையே சேரும். இந்த பேரின வாதம் ராஜபக்ச அன் கோ வினாலேயே முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் முடிந்தால் ராஜபக்ச அன் கோ விற்கு அழுத்தம் கொடுங்கள்.
ReplyDelete