கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கண்காட்சி
(அபூ நாதில்)
கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். ஸஹீர் தலைமையில் இன்று ஆரம்பமாகியது. புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். ரியாஸ், கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் ஆகியோர் முதல் நாள் நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர். நாளையும் நாளை மறு தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.





Post a Comment