Header Ads



முட்டுக்காலில் நிறுத்தப்பட்ட ஆசிரியைக்கு மரண அச்சுறுத்தல்

ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் மாகாண சபை உறுப்பி ஆனந்த சரத் குமாரவினால் முட்டுக்காலில் நிறுத்தப்பட்ட, புத்தளம், நவகத்தேகம நவோதயா மகா வித்தியாலத்தின் ஆசிரியருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை ஆசிரியர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. குறித்த ஆசிரியரின் வீட்டுக்கு அருகில் நேற்றைய தினம் இனந்தெரியாத சிலர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியதாக தெரிவிக்கப்பட்டுள்;ளது.

இது தொடர்பில் காவற்துறையில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக, குறித்த ஆசிரியரின் கணவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார். குறித்த பாடசாலையின் மாணவிகள் சிலர் குள்ளமாக சீருடை அணிந்து வந்த நிலையில், குறித்த ஆசிரியர்கள் அந்த மாணவிகளை எச்சரித்துள்ளார்.

இவ்வாறு எச்சரிக்கப்பட்ட மாணவிகளில் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவின் மகளும் இருந்தார். இதனைத் தொடர்ந்து பாடசாலைக்குள் நுழைந்த மாகாண சபை உறுப்பினர் அந்த ஆசிரியையை முட்டுக்காலில் இருக்க செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன்

1 comment:

  1. மாத,பிதா,குரு பிறகு தெய்வம் என்று பலம் கால பலமொழி,இதை தொடர்ந்து வாசிப்பு நேயர்களே மனசாச்சி என்னா என்று கையை நெஞ்சில் வைத்து முடிவை எடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.