முஸ்லிம் காங்கிரஸ் தமது உண்மையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் - ஐ.தே.க.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் தங்களின் உண்மையான நிலைப்பாட்டை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும் என்று, ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற கட்சி என்ற அடிப்படையில், தற்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் தங்களின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment