Header Ads



இணையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் வருகிறது


இணையதளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து இயங்கும் இணைய தளங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய வகையில் இந்த சட்டம் அமையவுள்ளது.

இலங்கையிலிருந்து இயங்கும் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், சட்ட வரைவுகளை மேற்கொள்ள கமிட்டி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் ஊடக அமைச்சின் செயலாளர் சரிதா ஹேரத் தெரிவித்துள்ளார்.

67 இணைய தளங்கள் மட்டுமே ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய பதிவு செய்யாத இணைய தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போலியான தகவல்களை வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் ஊடகம் தொடர்பான சட்டங்கள் காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பதிவுக்கு உட்படுத்தப்படாத ஊடகங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சில இணைய தளங்கள் சமூகத்திற்கு பாரியளவில் தீங்கை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலிருந்து இயங்கும் இணைய தளங்களை முடக்கிய போதிலும் வெளிநாடுகளிலிருந்து இயங்கும் இணைய தளங்களை தடை செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். gtn

1 comment:

  1. அரசாங்கத்தின் ஊழல்களை யாரும் வெளியில் காட்டிக்கொடுக்கக்கூடாது என்பதற்கா அரசாங்கம் எவ்வளவெல்லாம் சிரத்தை எடுத்து தனது வேலையை முன்னெடுத்துச்செல்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.