பணக்காரர்கள் அதிகமுள்ள நாடு கத்தார்
எண்ணெய் வளம் கொழிக்கும் கத்தார் நாட்டில் 14.3 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வறிக்கையின் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இந்த ஆய்வறிக்கையின்படி, கத்தாரில் உள்ள ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 143 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்களாக இருகின்றனர். இது உலக நாடுகளின் செல்வந்தர்களின் சதவிகிதத்தை விட அதிகமாகும்.
மற்ற அரபு நாடுகளில், குவைத் 11.5 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், பஹ்ரைன் 4.9 சதவிகிதத்துடன் ஏழாவது இடத்திலும், ஐக்கிய அரபுக் குடியரசு 4 சதவிகிதத்துடன் ஒன்பதாவது இடத்தையும் பிடிப்பதாக பாஸ்டன் ஆலோசனைக் குழுவின் 13ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த 2012ஆம் ஆண்டில், மத்தியக் கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் செல்வந்தர்களின் வளர்ச்சி விகிதம் 9.1 என்ற சதவிகிதத்தில் இரு மடங்கு ஆகியுள்ளது. 2017ஆம் ஆண்டிற்குள், இந்த இரு நாடுகளின் தனியார் சொத்து மதிப்பானது 6.5 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டக்கூடும். இதற்கு முக்கிய காரணமாக இருக்கப்போவது, எண்ணெய் வளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனாகும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
பாஸ்டன் ஆலோசனைக் குழு, உலக அளவில், வியாபார உத்திகளுக்கும், நிர்வாக மேம்பாட்டிற்கும் ஆலோசனை மையமாகச் செயல்பட்டு வருகின்றது.
.jpg)
Post a Comment