இங்கிலாந்தின் தருள் உலும் இஸ்லாமியப் பள்ளிக்கு தீவைப்பு
இங்கிலாந்தின் சிசில்ஹர்ஸ்ட் பகுதியில் தருள் உலும் என்ற இஸ்லாமியப் பள்ளி உள்ளது. இது ஒரு உறைவிடப்பள்ளி ஆகும். இங்கு 130 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
வார விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று, யாரோ பள்ளிக்குத் தீ வைத்துள்ளனர். காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நான்கு தீயணைப்பு வண்டிகளும், 21 தீயணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு விடியற்காலையில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் பள்ளிக்கட்டிடம் சேதமடைந்துள்ளது. தீயினால் எழுந்த புகையை சுவாசித்ததால், இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், இஸ்லாமியர்கள் வாழும் பகுதி முழுவதும், காவல் துறையின் பாதுகாப்பும், ரோந்துப் படையும் அதிகரிக்கப்பட்டது.
இன்று, சந்தேகத்தின் அடிப்படையில், 17 வயதுடைய பிரிட்டிஷ் இளைஞர்கள் இருவரும், 18 வயதுடையவர் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்ற மே மாதம், ராணுவப்பணி முடித்து வீடு திரும்பிய லீ ரிக்பி என்ற பிரிட்டிஷ் வீரரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் இருவர் கொன்றனர்.அவர்கள் இருவரும் கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயினும், அதுமுதலே இங்கிலாந்து நாட்டில் இத்தகைய இனக் கலவரங்கள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன.

Post a Comment