ஸ்ரீசாந்த்- அங்கீத் சவான் உள்ளிட்ட 19 பேருக்கு ஜாமீன்
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா மற்றும் தரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் ஜாமீன் மனுக்கள் இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களை விசாரித்து வருவதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்ட குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை.
இதனையடுத்து ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் 17 பேருக்கு ஜாமீன் வழங்கினார். மேலும் அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாதபடி, அவர்களின் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். ஆனால், உள்நாட்டில் எந்த இடத்திற்கும் அவர்கள் சுதந்திரமாக செல்லலாம்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அஜித் சாண்டிலா ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஹவாலா மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Post a Comment