Header Ads



ஞானசார தேரரை பேட்டிகண்ட ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்


(Gtn) தெரண தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியை நடத்தும் தில்கா சமன்மலிக்கு கடந்த சில தினங்களில் தொடர்ந்தும் தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த வாரம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கலந்து கொண்டதுடன், அப்போது தில்கா, தேரரை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் கேள்விகளை தொடுத்துள்ளதாக அந்த தொலைபேசி அழைப்புகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.

ஞானசார தேரர், சிங்கள பௌத்தர்கள் குறித்தும், சூது மற்றும் மதுபானம் குறித்தும் கருத்து வெளியிடும் போது, தில்கா, இடைநிறுத்தி, தேரர் மதுபானத்தை அருந்தி விட்டு, வாகனம் ஓட்டிய சம்பவம் தொடர்பாக வழக்கொன்று இருப்பது பற்றிய கேள்வியை கேட்டுள்ளார். ஞானசார  தேரர் மதுபானம் அருந்தி விட்டு, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியமை தொடர்பாக தில்கா கடுமையான கேள்விகளை கேட்டிருந்தார்.

எவ்வாறாயினும் தெரண தொலைக்காட்சியின் உரிமையாளர் திலித் ஜயவீர, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடதக்கது. 

11 comments:

  1. Koley atchuraththal viduvath thathanaal kutram purindullathu memmelum veliyil varum.

    ReplyDelete
  2. இந்த ஊடகவியலாளரிடமிருந்து கொஞ்சத்த வாங்கி நம்ம அரசியல் வாதிகளுக்கு பருக்கணும்.

    ReplyDelete
  3. Derana urimaiyalarin nerungiya thodarpudayawarum, BBC yin urimayalarum oruware, enawe awarhal samalitthuwiduwarha, naam en kawalaippada wenum, innum irandunatkalil idhu marandhu pohum

    ReplyDelete
  4. ஞானசாரவுக்கு இந்தளவு தைரியம் கொடுத்ததே கோத்தாதானே அதனால்தான் ம.ரா. வுக்கு ஒன்றும்பேசமுடியாத நிலை மிக விரைவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்.

    ReplyDelete
  5. nan kudippan maththawanka than kudikkakudazu sattam tha kail

    ReplyDelete
  6. Hi Friends,

    ஒரு மத அடிப்படைவாதியை -அவர் தனது சொந்த மதத்தைச் சேரந்தவராக இருந்த போதிலும்- எப்படித் தோலுரித்திருக்கின்றார் அந்தப் பெண் ஊடகவியலாளர்.

    But, தாலிபன்கள் போன்ற நமது மதத்தைச் சேர்ந்த அடிப்படைவாதிகளை இதேபோல தோலுரிக்க நம் ஊடகவியலாளர்கள் எவராவது முன் வருவார்களா..?

    அப்படியே நம்மில் ஒருவர் தோலுரித்தாலும் இன்று தில்கா சமன்மாலிக்கு ஆதரவாக இருக்கின்ற நாம் அப்படியானவருக்கு ஆதரவு காட்டுவோமா கூறுங்கள்...? Think & say your opinion.

    ReplyDelete
  7. @ jessly

    muzammil in men, jessly in women, if you want to criticize Taliban first you go to Afghanistan and comment (kinatru thavalai, munthiri kottai)

    Siraj

    ReplyDelete
  8. நதிரா,

    தமிழிலும் எழுதத் தெரியாமல் ஆங்கிலத்தையும் சொதப்பிக்கொண்டு தடுமாறுவதைவிட முதலில் ஏதாவது ஒரு மொழியிலாவது உங்கள் கருத்தை தெளிவாக எழுதக்கற்றுக்கொண்டு பின்னூட்டமிட வாருங்கள். அதன்பிறகு அப்கானிஸ்தானுக்கு போவதைப்பற்றியெல்லாம் பேசலாம்.

    ReplyDelete
  9. தலிபான்களைப் பற்றி Reuters, BBC, CCN மற்றும் பல மேற்கத்தேய செய்திச் சேவைகள் அளிக்கும் தகவல்களைத்தான் மற்ற ஊடகங்கள் ஒளி, ஒலிபரப்புச் செய்கின்றன. அவற்றை மட்டும் வைத்திக்கொண்டு பக்கச் சார்பாக முடிவெடுப்பது தவறு.

    ReplyDelete
  10. Jeezan,

    இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இதையே கூறிக்கொண்டு மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத அடிப்படைவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவீர்கள்..?

    அமெரிக்க இஸ்ரேல் சார்பு மற்றும் இஸ்லாமிய விரோத ஊடகங்களின் செய்திகளையும் நடுநிலையான செய்திகளையும் பிரித்தறிய முடியாதவர்களல்ல நாங்கள்.

    எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு எனும் பகுத்தறிவு கொண்டுதான் உலக அரசியலை ஆராய வேண்டுமென்பது இன்றைய நர்சரி குழந்தைக்கே தெரியும்.

    தாலிபன்கள் பற்றி அமரிக்க சார்பு ஊடகங்கள் கூறுவது எல்லாம் பொய்யுமல்ல. இஸ்லாமிய சார்பு ஊடகங்கள் மெச்சுவதெல்லாம் உண்மையுமல்ல.

    ReplyDelete
  11. I agree with Jessly. I am not supporting them but told you to not take decision from outward views... We dont know the real situations of those countries...

    ReplyDelete

Powered by Blogger.