Header Ads



'ஒளிரும் கல்முனை' - சாய்ந்தமருதுவில் மஸ்ஜிதுல் குபா எனும் பள்ளிவாயல்


(அப்துல் அஸீஸ்+ எஸ்.அஷ்ரப்கான்)

திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் ஒளிரும் கல்முனை “ திதுலன ” 51 வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வேலையைான சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மஸ்ஜிதுல் குபா எனும் பள்ளிவாயல் முதல்கட்டமாக சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஸீர் தலைமையில் இடமபெற்ற இந்நிகழ்வில் எச்எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பொருளாளர் ஏ.சீ. யஹியாகான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். பிர்தௌஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பாயிஸ், சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா உட்பட பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.



1 comment:

  1. சாய்ந்தமருதில் ஏற்கனேவே நிறைய பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இருக்கின்ற பள்ளிவாசல்களின் அரைவாசி அளவு கூட தொழுகைக்காக மக்களால் நிரம்புவதில்லை. அப்படி இருக்க எதற்காக தெருவுக்கு தெரு புதிய பள்ளிவாசல்கள் கட்ட வேண்டும். இந்த அரசியல்வாதிகள் மக்களின் பணத்தை ஏன் இவ்வாறு வீணாக்குகிறார்கள்? இந்த பணத்தை வேறு ஒரு அடிப்படைத் தேவைக்காக பயன்படுத்தலாமே.

    ReplyDelete

Powered by Blogger.