பிரித்தானியாவில் இலங்கை கிரிக்கட் அணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் அரையிறுதி போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது.
இதேவேளை இன்றைய போட்டி நடைபெறவுள்ள கார்டிப் வேல்ஸ் மைதானத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த, பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் அமைப்புகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. பிரித்தானிய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இதேவேளை இன்றைய போட்டியின் போது இலங்கை கிரிக்கட் அணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, இலங்கை வெளிவிகார அமைச்சு ஸ்கொட்லேண்ட் யார்ட் காவற்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியாவின் ஸ்கொட்லேண்ட் யார்ட் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment