ஆண் உறுப்பு இரண்டானது - பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையளித்து டாக்டர் ஜெமீல் சாதனை
(Tn) அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றும் டொக்டர் எஸ். எம். ஜெமீல் ஒன்றரை மணி நேரமாக மேற்கொண்ட சத்திரசிகிச்சையின் மூலம் 2 வயதுக் குழந்தையின் பிறப்புறுப்பு சீர் செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவுகளாகப் பிளந்த ஆண் உறுப்பு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையின் மூலம் சீர் செய்யப்பட்டுள்ளது. இது வைத்தியத் துறையில் ஒரு சாதனையாகும்.
தச்சுத் தொழில் செய்யும் வேலைத் தளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளை அங்கு வைக்கப்பட்டிருந்த மின் இயக்கத்தில் இருந்த துளையிடும் கருவியைக் கையில் எடுத்து தவறுதலாக இயக்கிய போது ஆண் உறுப்பு இரண்டாகப் பிளந்துள்ளது.
இந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக டொக்டர் ஜெமீல் தலைமையில் இயங்கிய வைத்தியக் குழு 1 1/2 மணி நேர பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது. தற்போது குழந்தை நலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.
சத்திரசிகிச்சை நிபுணர் ஜெமீலின் அயராத முயற்சியை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம். எம். தாkம் பாராட்டியுள்ளார்.

எல்லா புகழும் அல்லாஹுக்கே
ReplyDeleteயா அல்லாஹ் Dr. ஜெமீலுக்கு மெம்மேலும் உன் அருளை சொரிவாயாக !!!
Amazingggggggggggggg! Well Done Dr.Jameel
ReplyDeleteSIR . JAZAKALLAHU KHAIRAN. UNGALATHU THIRAMAYAI MEALUM ALLAH ATHIKARIKKATTUM.AMEEN.
ReplyDeleteHi Friends,
ReplyDeleteமருத்துவர் அவர்களை அவரது திறமைக்ககாகவும் அர்ப்பணிப்புக்காகவும் பாராட்டும் அதேவேளை அந்த குறிப்பிட்ட ஆண்குழந்தையை ஆபத்தான மின்னுபகரணங்கள் இணைப்பில் இருக்கும் இடத்திலே விளையாட விட்டுவிட்டு அலட்சியமாக இருந்த பெற்றோர்களின் பொறுப்பற்ற செயலையும் கண்டிக்க வேண்டும்.
இதுகூட ஒருவகை சிறுவர் துஸ்பிரயோகமே.