Header Ads



50,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1 1/2 கிலோ போதைப் பொருளை எடுத்துவந்தவர் கைது

(Tn) சென்னையிலிருந்து 1 1/2 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த திஹாரிய பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என சுங்க திணைக்கள பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். நேற்றுக்காலை சென்னையிலிருந்து வந்திறங்கிய ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸக்குச் சொந்தமான யூ. எல். 122 ரக விமானத்தில் வந்த நபர் ஒருவரின் பயணப் பொதியை விமான நிலைய போதை ஒழிப்பு பிரிவினர் சோதனை

செய்த போதே 1 1/2 கிலோ ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது. கறுவா, ஏலம், கராம்பு போன்றவற்றை பயண பொதிக்குள் வைத்து அதன் நடுவே ஹெரோயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 53 வயதுடைய இந்த வர்த்தகர் தாம் சென்னையிலிருந்து வரும் போது பயணப்பொதியை ஒருவர் தம்மிடம் தந்ததாகவும் இதனை இலங்கைக்குக் கொண்டு சென்று சேர்த்தால் 50,000 ரூபா தருவதாக அந்த நபர் கூறியதாக தெரிவித்துள்ளார். சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் திஹாரிய வர்த்தகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 comment:

  1. If this business man is a Muslim, then he should be sentenced to death. Because, such activities will spoil entire Muslim Community. He was trying to earn by Haram way. We fight for Haram / Halaal but we never mind such harsh cases….

    ReplyDelete

Powered by Blogger.