முசலியில் இரு மாடிகளைக்கொண்ட பள்ளிவாயல் அமைக்கப்படவேண்டும்
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலகிராமங்களில இருமாடிகளைக் கொண்ட 2.5 கோடி ரூபாய்கள் பெறுமதியான பள்ளிகளை,தௌஹீத் ஜமாஅத்,ஜமாஅதே இஸ்லாமி போன்ற அமைப்புக்கள் முஸ்லிம் நாடுகளில் இருந்து பெரும் நிதவுதவிகளைப்பெற்று சிறப்பான கட்டிடநிர்மானபப்ணிகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றன.
வேப்பங்குளம்,கூளாங்குளம், பாலைக்குழி,கரடிக்குழி சிலாவத்துறை போன்ற கிராமங்களின் பள்ளிகள் மிகவும் அழகான வகையில் காட்சி தருகின்றன.இக்கட்டிடம் கிடைத்தமையை இட்டு இப்பிரதேச மக்கள் பெருமகிழ்வு அடைகின்றனர்.
1990 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முசலிக்கிராமப் பள்ளிவாயல் கதவுகள்,யன்னல்கள்,அனைத்தையும் இழந்து மேற்கூரையுமின்றிக் காணப்பட்டது.சுவர்களும் பல இடங்களில் வெடிப்படைந்து காணப்பட்டது. முசலிப்பிரதேச செயலகப்ப்ரிவுக்குட்பட்ட அனைத்து முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து மரந்தடிகளையும்,தென்னங்கிடுகுகளையும் இணைத்து இப்பள்ளியை ஆரம்ப்pத்தனர். ஐவேளைத்தொழுகையும்,ஜும்ஆ தொழுகையும் சிறப்பாக இடம் பெற்றதை அனைவரும் அறிவோம் இக்கிராமம் மத்தியாக இருப்பதனால் பெரும் வியாபாரிகளும்,பொதுமக்களும்,அரச அதிகாரிகளும்,மஹிந்தோதய பாடசாலை மாணவர்களும் அதிகம் இங்கே வருகை தருகின்றனர்.
இப்பள்ளியின் வசதிவாய்ப்புகள்,போதாமலுள்ளதை அறியக்கூடியதாக உள்ளது.போதிய நீர்த்தடாக வசதிகள்,மலசல கூடங்கள் என்பனவும் போதாமலுள்ளன.பள்ளிவாயலின் வெளிச்சுவர்களும் பூசப்படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.இங்கு புதிய இருமாடிகளைக்கொண்ட பெரிய பள்ளிவாயல் கட்டப்படவேண்டிய தேவை உள்ளது.அதனுடன் இணைந்த இஸ்லாமிய வழிகாட்டலும் உருவாக்கப்படவேண்டும்.முசலிப்பிராந்தியத்தின் மத்திய நிலையமாகவும் இப்பள்ளிவாயல் இயங்கவேண்டுமென இப்பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முஸ்லிம் அமைப்புக்கள் இப்பிரதேசங்களுக்கு நேரடியாக வருகை தந்து முசலியின் பழைய பள்ளியைப்பார்வையிட்டு புதிய இருமாடிப்பள்ளியை நிர்மானிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என முசலி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Post a Comment