Header Ads



மூதூர் வைத்தியசாலையில் நிலவும் பற்றாக்குறை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்


(மூதூர் முறாசில்)

மூதூர் தளவைத்தியசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று சனிக்கிழமை  மூதூர் அல்-ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்; தலைவரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பி.கே.களீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர் வரும் ஜுலை மாதம் இரண்டாம் திகதி இவ்வைத்தியசாலை வளப்பற்றாக்குறையை நிவாத்திப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை மூதூரில் மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது.



1 comment:

  1. Hi Friends,

    ஒரு வைத்தியசாலைக்கு ஆளணி உபகரணங்கள் அத்தியாவசியமானவையே.

    ஆனால் அவற்றைவிட அத்தியாவசியம் அங்கு பணியாற்றும் வைத்தியர்களின் அர்ப்பணிப்பும் ஊழியர்களின் கடமையுணர்வும்.

    நமது உள்ளுர் வைத்தியர்களே சமூகப்பற்றுணர்வு போதாத (note: 'இல்லாத' என்று கூறவில்லை) விதமாய் நடந்து கொண்டால் வெளியூர் வைத்தியர்களும் ஊழியர்களும் என்னதான் செய்வார்கள்?

    ReplyDelete

Powered by Blogger.