தல்கஸ்பிடிய கத்தார் நலன்புரிச் சங்கத்தின் விஷேட தொழில் சார் வழிகாட்டல் நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
கத்தார் நாட்டில் தொழில் புரியும் மாவனெல்லை பிரதேசத்திற்குட்பட்ட அரநாயக்க தல்கஸ்பிடிய கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பங்களிப்பின் கீழ் இயங்கி வருகின்ற தல்கஸ்பிடிய கத்தார் நலன்புரிச் சங்கம் (THAQWA ) எனும் அமைப்பினால், தமது ஊரில் க.பொ.த. சா/த, மற்றும் க.பொ.த. உ/தர படிப்பினை முடித்துவிட்டு எதிர்கால திட்டங்களை சிந்தித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும்,க.பொ.த. சா/த, மற்றும் க.பொ.த. உ/தர படிப்பினை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கும், தமது தகைமைக்கு ஏற்ற வேலை வாய்ப்புக்களை எதிர்பார்த்து / தேடிக்கொண்டு நிற்பவர்களுக்கும், மற்றும் அவர்களது பெற்றோருக்குமான ஓர் விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி எதிர்வரும் 16.06.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அப்பிரதேச மக்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு THAQWA குழு அன்பாய் கேட்டுக்கொள்கின்றது.
வஸ்ஸலாம்
THAQWA ஏற்பாட்டுக் குழு
.jpg)
Post a Comment