சர்வதேச குர்ஆன் போட்டியில் முதலிடம்பெற்ற ஹாபிஸ் றிஸ்கானை பிரதமர் கௌரவித்தார்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
83 நாடுகள் கலந்து கொண்ட 2012 ஆம் ஆண்டின் 34வது அரசர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் ஓதும் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை மாணவனான ஹாபிஸ் எம்.ஆர்.எம்.றிஸ்கானை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இன்று 27ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமரும் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான கலாநிதி டி.எம்.ஜயரத்னவும், அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், பலஸ்தீன் மற்றும் ஈரான் நாடுகளின் இலங்கைக்கான தூதுவராலய பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்..
கொழும்பு -12 மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் மாணவனான றிஸ்கானுக்கு நினைவுச் சின்னமும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



الحمدلله. بارك الله في علمه و في حياته و في كل عمره
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteما شاء الله وبارك الله فيكم
ReplyDelete