ரகர் மோதல் போட்டியில் மோதல் - வீரர்களுக்கு காயம்
(J.M.HAFEEZ)
கண்டி போகம்பறை மைதானத்தில் இடம் பெற்ற றகர் போட்டியில் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் போட்டி இடை நிறுத்தப்பட்டது.வீரர்கள் பலர் காயமடைந்தனர்.
(27.6.2013) மாலை கண்டி கிங்ஸ்வூட் கல்லூரிக்கும் கட்டுகாஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரிக்கு மிடையே இடம் பெற்ற இப்போட்டியில் கிங்ஸ்வூட் கல்லூரி 2 பெனல்டி மூலம் 6 புள்ளிகளையும் புனித அந்தோனியார் கல்லூரி 1 ட்ரை மூலம் 5 புள்ளிகளையும் பெற்ற போதே வீரர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர்.
பொலீஸார் பெறுமளவு கடமையில் ஈடுபடுத்தப்படிருந்ததன் காரணமாக தாக்குதல் கட்டுப் பாட்டின் கீழ் கொண்ட வரப்பட்ட போதும் சில வீரர்கள் காயமுற்றனர். காயமடைந்த வீரர்கள் கண்டி வைத்திய சாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.


Post a Comment