Header Ads



சவூதி அரேபிய மார்க்க அறிஞரின் உபதேசத்தை நிராகரித்த பாடகி

பின்னணி பாடகி ஆலம் (வயது 44) பணக்கார பாடகி ஆவார்.

துபாய், பஹரைன், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பறந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவருக்கு துபாய், எகிப்து, லண்டன் போன்ற நாடுகளில் சொகுசு மாளிகைகள் உள்ளன.

சவுதி அரேபியாவை சேர்ந்த இஸ்லாமிய போதகர் ஷேக் முஹம்மது அல் உரைஃபி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஆலமிற்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார்.

'எனது சகோதரி ஆலம், சர்வ வல்லமை படைத்த இறைவனின் மீது அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்திருப்பது உண்மை என்றால்... இன்றிலிருந்து அவர் பாடுவதை நிறுத்திக் கொண்டு இஸ்லாமிய போதகராக மாறி எதிர்வரும் ரம்ஜான் நோன்பு காலத்தில் இறைவனின் நல்லருளைப் பெற வேண்டும் இதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று அவர் அறிவுரை கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து தனது 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்த ஆலம், 'எனது இசையையும் தொழிலையும் நான் தொடர்ந்து செய்யத்தான் வேண்டும். விட்டுவிட முடியாது. நீங்கள் என்மீது வைத்திருக்கும் அக்கறைக்கு உரிய சன்மானத்தை இறைவன் உங்களுக்கு அருள்வானாக... ஏற்கனவே கூறியதுபோல் எனக்காக நீங்கள் வேண்டிக் கொண்டால் மட்டும் போதும்.

எனது பிரார்த்தனைகளையும் உங்களின் பிரார்த்தனைகளையும் இறைவன் ஏற்றுக் கொள்வானாக...' என்று குறிப்பிட்டுள்ளார்

18 comments:

  1. இது சவூதிநாட்டின் (முதவ்வா) மார்க்கஅறிஜர்களின் கையாலாகாத தனத்தைத்தான் குறிக்கிறது. பெண்களுக்கு சுதந்திரம் வழங்க இஸ்லாம் சொல்கிறது. அதுக்காக இப்படியெல்லாம் ஊர்மேய இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

    ReplyDelete
  2. Allah may give hidayath for this lady , how many renowned people of Europ,Africa and rest of the world have embraced the Islam and living according to the Islam but unfortunately a lady from prophet birth place doing againts the Islam, I think she no yet think about the next world is the lasting place. Subhanallah.

    ReplyDelete
  3. எங்கே?????? சவுதி அரேபியா வின் சரியா சட்டம்

    ReplyDelete
  4. Hi Friends,

    'வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை' என்று மரபுத்தொடர் தமிழிலே உண்டு. அதைப்போலத்தான் நம்மவர்கள் செயற்படுகின்றார்கள்.

    ஒன்றில் முகம் உட்பட முழுஉடலோடு தமது ஒட்டுமொத்த சுதந்திர உணர்வுகளையும் மூடிக்கட்டிக்கொண்டு அடங்கிக்கிடக்கின்றார்கள். அல்லது அரைகுறை ஆடையணிந்து மேற்கத்திய நடனமாதுக்கள் போன்று அலைய ஆசைப்படுகின்றார்கள்.

    ஒன்றுக்கொன்று முரணாண இந்த இரு துருவங்களுக்கும் ஒரு பெண் போக வேண்டியதில்லை.

    ஒரு சிறந்த மனிதனாக வாழ்வதற்கு அவசியமான சுதந்திரம், சுயபலம், தன்னம்பிக்கை, தன்முனைப்பு போன்றவற்றோடு ஒரு பெண் போதியளவு மரியாதையாக வாழ்வதுதான் சரியானதாக இருக்கும்.

    அதேவேளை கோடிக்கணக்கில் பணத்தைக்கொட்டி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மதுபானப் பார்ட்டி வைத்து பெண்கள் சகிதம் கும்மாளமிடும் அரபு நாட்டு இளவரசர்களை விட்டுவிட்டு பெண்களைத் தேடிப்பிடித்து அடக்கமாக வாழுமாறு போதித்துக்கொண்டிருக்கும் சவூதியின் மதப்போதகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

    ReplyDelete
  5. பிரதான செய்தியை மட்டும் பார்த்து விட்டு மடையர்களைப்போன்று பின்னூட்டங்களில் எழுதக்கூடாது.முதலில் குறித்த பாடகி ,அவர் பெயர் அஹ்லாம் .ஆலம் அல்ல .அவர் பின்னணிப்பாடகியல்ல -எமது இந்திய இலங்கை நாடுகளைப்போன்று படங்களுக்குப்பாடுபவரல்ல நேரடியாக இசை ஆல்பங்களிலுக் மேடைகளிலும் படுபவர்.இவர் பஹ்ரைன் நாட்டில் பிறந்தாலும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் குடியுரிமை பெற்றவர்.அஷ்ஷெய்க் உறைபி சஊதியைச்சேர்ந்தவர். பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளன்.அவர் யாருக்கு வேண்டுமானாலும் உபதேசம் பண்ணலாம் . அது அவரின் கடமை. அதைக்கேட்பதும் மறுப்பதும் அவரவர் உரிமை.அதற்குரிய வெகு மதி அல்லாஹ்விடம்.ஆனால் இங்கு கருத்து கூறுபவர்கள் எதற்காக தேவை இல்லாமல் இஸ்லாமிய ஷரீஆவை சாடுவதும் சஊதியின் ஷரீஆச்சட்ட அமுலாக்கத்தை விமர்சிப்பதும் ,உலமாக்களையும் சஊதி முதவ்வாக்களையும் விமர்சிப்பது சம்பத்தப்பட்டோரின் மனோ வியாதிகளை படம் போட்டுக்காடுகின்றது,மேற்படி பெயருடைய பாடகியின் விடயத்துக்கும் ஷரீஆச்சட்டத்தையும், உலமாக்களையும், சஊதியையும் முதவ்வாக்களையும் விமர்சிப்பதுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது,?என்று நாம் சிந்திக்கவேண்டும்.சம்பந்தப்பட்டோர் உலமாக்கள் மூலமாமப்பாதிக்கபட்டுஇருந்தால் உரியவர்களிடம் அதைப்பார்த்துக்கொள்ளலாமே.

    ReplyDelete
  6. rasoolullah waal nda boomi en pathatkai allah anda boomi yai barakath nirainda thai waithirukkiran illayell alittiruppan

    ReplyDelete
  7. abdul careem

    நான் ஏற்கனவே பின்னூட்டத்தைப்பார்த்துவிட்டேன் இருப்பினும் அதற்கு விளக்கமோ பதிலோ அல்லது அது சம்மந்தமாகவோ எதுவும் தர விரும்பவில்லை நீங்கள் சரியாக எனது விடயத்தையே குறிப்பிட்டுள்ளீர்கள் மிக்க நன்றி....

    ReplyDelete
  8. நிசாம் ஜப்பார் ,றனீஸ் எம் ஹெச் எம், உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  9. அப்துல் பரீம் அவர்களுக்கு
    துாய இஸ்லாம் சொல்லும் சரிஆ சட்டம் சஊதியில் உள்ளதாகவும், அது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் உங்களால் கூற முடியுமா? சஊதியில் மன்னனும், மன்னியும் எந்த சரிஆவின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள்? இன்று உலகம் இஸ்லாத்தை இவ்வளவு துாரம் விமர்சிக்க சஊதி மன்னர்களும் வாழ்க்கை முறையும் காரணமில்லை என்று உறுதியாக கூற முடியுமா? இஸ்லாம் எங்கிருக்கிறது நாமும் சஊதியும் எங்கிருக்கிருக்கிறோம்.

    ReplyDelete
  10. அப்துல் கரீம் சென்னது மிகச் சரியானது
    நபி ஸல் அவர்கள் கூறினார்கள் எவர் ஒரு முஸ்லிமின் மானம் மற்றும் மரியாதை மீறப்படும் சந்தர்பத்தில் அவருக்கு உதவி செய்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு மிக தேவையான நேரத்தில் உதவி செய்வான் மற்றும் ஒரு முஸ்லிமின் மானம் மற்றும் மரியாதை சீரழிக்கப்படும் சந்தர்பத்தில் உதவி செய்யாமல் அவருக்கு உபத்திரவம் செய்கின்றாரே அவருக்கு தேவையான சந்தர்பத்தில் அல்லாஹ் உதவி செய்யாமல் விட்டுவிடுகின்றான் அறிவிப்பவர் தல்ஹா பின் ஸஹ்ல்
    சவ்தி அரேபியா என்றால் சிலருக்கு அங்குள்ள சட்டம் மற்றும் உலமாக்கள் விடயத்தில் ஒரு வித வஞ்சகத்தை பார்க்கலாம் காரணம் அவர்கள் சார்ந்த இய்ககங்கள் அங்கு தடை விதிக்கப்பட்டது தான் என்பது என் கருத்து ஆனால் இப்படியானவர்கள் தங்கள் தேவைக்கு தாராளாமக சவ்தியை புகழ்வார்கள் இது கண்கூடாக கண்ட சிலவை
    ஜஸ்லியா என்பவர் பெண்ணா அல்லது பெண் பெயரில் உல்ல ஆணா தெரியாது உங்களுக்கு முகம் மூட விருப்பமில்லையா விட்டு விடுங்கள் இந்த இடத்தில் அதுக்கு என்ன சம்பந்தம்
    மற்று வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சிலவு செய்து கும்மாளமிடும் இளவரசர்களுக்கு செல்லவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும் அப்படி செல்லவில்லையென்றால் மற்றவர்களுக்கும் செல்லக்கூடாதா? யார் இந்தக் கருத்தை உங்களுக்கு ஊட்டினார்களே தெரியல்ல

    ReplyDelete
  11. Dear Careem Jasakallahu hair

    ReplyDelete
  12. Dear Jassly

    I was been study for long period of your comments, your all comments coming against to Islam and it's culture, my opinion is you me be a non Muslim or you do not have any clear knowledge about Islam

    ReplyDelete
  13. எனது தாழ்வான கருத்து...
    தேவையற்ற வீணான செய்தி, அதற்கு ஆபாசமான புகைப்படம். அப்போ இங்கு உமக்கென்ன வேலை என்றா கேட்கிறீர்கள்? கமெண்ட்ஸ் அதிகமா இருந்துது வாசித்துத் தான் பாப்பம் எண்டு வாசித்தன்.

    ReplyDelete
  14. Mohamed Jiffry,

    பொதுவாக பெண் அடிமைத்தனங்களைப் பற்றிய கருத்துக்களை தளங்களிலே எழுதியதும் அதற்கு பல உடனடி விளைவாக நான் சந்திப்பதுண்டு. அவற்றிலே படு கேவலமாக எழுதப்பட்ட மின்னஞ்சல்களும் உள்ளடங்கும். அவற்றை எழுதுவது வேறுயாருமல்ல. பிரபல இணையத்தளங்களிலே தம்மை மிகப்பெரும் இஸ்லாமியப் பற்றாளர்களாக காண்பித்துக்கொள்ளும் நமது ஆண் சகோதரர்கள்தான்.

    அவர்கள் முஸ்லீம்களாக இருந்தும் கூட ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி சிந்திப்பதே கிடையாது.

    அவர்களிலே பலர் எவ்வாறான முஸ்லீம்கள் என்றால் உங்களைப்போன்ற தொடுவானச் சிந்தனை கொண்ட முஸ்லீம்கள். அதாவது தொடுவானத்திற்கு அப்பால் எதுவுமில்லை என்று நம்பும் சிறுபிள்ளைகளைப் போன்றவர்கள். அவர்கள் தமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருப்பவற்றுக்கு அப்பால் சிந்திப்பதுமில்லை - சிந்திக்க விரும்புவதுமில்லை. ஆகவே என்னுடைய கருத்தின் நியாயத்தை எதிர்கொள்ள முடியாத ஆற்றாமை அவர்களில் பலரை என்மீது தனிப்பட்ட அவதூறுத் தாக்குதல்களில் ஈடுபடச்செய்திருக்கின்றது.

    அதுபோலத்தான் நீங்களும் இருக்கின்றீர்கள். இதுவரை அவதூறுத் தாக்குதலிலே ஈடுபடாது போனாலும் கருத்துக்களை ஏற்க முடியாமல் ஜல்லியடிக்கின்றீர்கள்.

    ஆணாதிக்க வெறிகொண்ட உங்களுக்கு உவப்பான கருத்துக்களைக் கூறினால் அவை இஸ்லாமிய சார்புக் கருத்துக்கள்.. உவப்பில்லாத கருத்துகளைச் சுட்டிக்காட்டினால் அவை இஸ்லாமிய எதிர்க் கருத்துக்களா?

    நன்றாக இருக்கின்றது உங்கள் நியாயம்!

    ReplyDelete

Powered by Blogger.