ஆப்கானிஸ்தான் விமான நிலையத்துக்கு அருகே பயங்கர தாக்குதல் (வீடியோ)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமான நிலையத்துக்கு அருகே பயங்கர தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், விமான நிலையம் அருகே புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த கட்டடத்துக்குள் நுழைந்தவாகள், துப்பாக்கிகளைக் கொண்டும், ராக்கெட்டுகளைக் கொண்டும் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த புதிய கட்டடம் பிடியில் இருந்து மீட்கப்பட்டது.

Post a Comment