வாஸ் குணவர்த்தனா குறித்து அம்பலப்படுத்துங்கள்..!
பிரதிக் காவல்துறை மா அதிபர் ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்ற போது குறித்த பிரதிக் காவல்துறை மா அதிபரின் புதல்வரும் பிரசன்னமாகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவரைக் கைதுசெய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதிக் காவல்துறை மா அதிபரின் புதல்வரைக் கைது செய்ய காவல்துறை உத்தியோகத்தர் அவரது வீட்டுக்கு சென்றதாகவும் அப்போது பிரதிக் காவல்துறை மா அதிபரின் மனைவி சகல உண்மைகளையும் அம்பலப்படுத்துவேன் என எச்சரிக்கை விடுத்ததனைத் தொடர்ந்து அவர்கள் வெறும் கையுடன் திரும்பியதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய சர்வதேச காவல்துறையின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதிக் காவல்துறை மா அதிபர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அவரை குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
என்ன காரணத்திற்காக இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டுமென ஜோன் அமரதுங்க கோரியுள்ளார். gtn
.jpg)
Post a Comment