கண்டி தெனுவர வலய தமிழ்மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கெலிஓயா நியுஎல்பிடிய இஸ்லாமிய வாலிப முன்னணி நடாத்தும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச முன்னோடிப் பரீட்சை எதிர்வரும் (23.06.2013) 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இதில் கண்டி தெனுவர வலய தமிழ்மொழிமூல பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பங்குபற்றுவர். இப்பரீட்சையை முன்னிட்டு வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயம் , அல்மனார் தேசிய பாடசாலை , பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் நியு எல்பிடிய அஸ்ஸம்ஸ் வித்தியாலயம் என்பவற்றில் பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment