Header Ads



சர்வதேச குர்ஆன் போட்டியில் முதலிடம்பெற்ற றிஸ்கானை புத்தசாசன அமைச்சு கௌரவிக்கிறது

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

2012 ஆம் ஆண்டின் 34வது அரசர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் ஓதும் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை மாணவனான ஹாபிஸ் எம்.ஆர்.எம்.றிஸ்கானை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமரும் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான கலாநிதி டி.எம்.ஜயரத்னவும், கௌரவ விருந்தினராக புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கொழும்பு -12 மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் மாணவனான றிஸ்கானுக்கு நினைவுச் சின்னமும் பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவித்தார்.

2 comments:

Powered by Blogger.