மூதூர் ஹைய்யதுஸ் நிறுவனத்தின் ஸகாத் பகிர்தளிப்பு
(மூதூர் முறாசில்)
மூதூர் ஹைய்யதுஸ் ஸகாத் நிறுவனத்தின் ஸகாத் பகிர்தளிப்பு வைபவம் இன்று ஞாயிற்றுக் கிழமை மூதூர் ஆனைச் சேனை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
ஹைய்யதுஸ் ஸகாத் நிறுவனத்தின் தலைவர் மௌலவி எம்.எம்.ஏ.சபூர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் மௌலவி எஸ்.எச்.எம்.தஸ்ரீக், மூதூர் றவ்ழதுல் ஜன்னா அரபுக் கல்லூரியின் உப அதிபர் மௌலவி முனாஸ் ரஸாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நிறுவனத்தினால் வசூலிக்கப்பட்ட ஸகாத் பணம் 26 குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.


Post a Comment