'நாங்கள் ஹிஸ்புல்லாவிற்கு எதிரானவர்கள்' மொஹமட் முர்ஸி
(அல்-ஜசீரா + ரமீஸ் அப்துல் கையூம்)
சிரியாவுடனான இராஜதந்திர உறவுகளை ரத்துச்செய்யப்போவதாக எகிப்து ஜனாதிபதி முஹம்மத் முர்சி அறிவித்துள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற அவரது கட்சி ஆதரவாளர்களின் பேரணி ஒன்றின்போது கெய்ரோவிலுள்ள சிரிய தூதரகத்தினை மூடுமாறு ஆணையிட்டார்.
லெபனான் ஆயுததாரிகளான ஹிஸ்புல்லாஹ் குழுவினரை சிரியாவை விட்டு வெளியேறுமாறு கூறினார். ஹிஸ்புல்லாஹ்வானது சிரிய அதிபர் பசார் அல்-அசாத்தின் படைகளுடன் சேர்ந்து சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடுகின்றனர்.
"நாங்கள் சிரிய மக்களுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் ஆக்கிரமிப்பிற்கும், ஹிஸ்புல்லாவிற்கும் எதிரானவர்கள்" என்றும் "ஹிஸ்புல்லா வலுக்கட்டாயமாக சிரியாவை விட்டு வெளியேறவேண்டும், இது பாரதூரமானது, சிரியாவில் அவர்களுக்கு எந்த இடமோ பகுதியோ கிடையாது" என்றும் கூறினார் .
எகிப்து ஜனாதிபதி சிரியாவிற்கு மேலான வான்பரப்பில் விமானங்கள் பறப்பதை சர்வதேச சமூகம் தடை செய்யும்படி அழைப்பு விடுத்தார். ஐ.நா.கணிப்பீட்டின்படி கடந்த இரு வருடங்களில் ஏறத்தாழ 93,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

Post a Comment