Header Ads



காத்தான்குடியில் புதிய வாசிகசாலை


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்பல்லாஹ்வின் வழிகாட்டலில் (சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தினால் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர் வீதி மார்க்கட் சதுக்கத்தில் புதிய வாசிகசாலை ஒன்று 16-06-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை  வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இதன் போது புதிய வாசிகசாலையை எம்.ஏ.எம்.ரவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர் ஹாபிஸ் நாடாவை வெட்டி வைபவரீதியாக திறந்து வைத்தார். 

(சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் ,வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் கணக்காளருமான ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் ரியல் ஸ்டார் கழகத்தின் தலைவர் றிஸ்வி,சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தின் செயலாளர் ஜலீல் உப செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், ஹூஸைனிய்யா பள்ளிவாயல் தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் ஜேபி ,காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபைத் செயலாளர் ஏ.ஜே.அனீஸ் அகமட் மற்றும் உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் ரியல் ஸ்டார் கழகத்தின உறுப்பினர்கள் பிரதேச மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு விஷேட துஆப் பிராத்தனை இடம்பெற்றது. இன்று திறந்து வைக்கப்பட்ட இவ் வாசிகசாலை தினமும் வார நாட்களில் எல்லா தினங்களிலும் பி.பகல் 3மணி தொடக்கம் இரவு 9.மணிவரை திறக்கப்படும் எனவும் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகள் அனைத்தும் இவ்வாசிகசாலையில் பார்க்க முடியும் எனவும் சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் ஜாபிர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.