டுபாயில் சாதனை படைக்கப்போகும் குடிநீர்
துபாயில் இயங்கி வரும் 'துபாய் கேர்ஸ்' என்ற தொண்டு நிறுவனம் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வாழும் குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி செய்து வருகிறது.
இந்த கல்வி தொண்டுக்காக இயற்கை தாதுக்கள் நிறைந்த 'மாசாபி' என்ற 1 1/2 லிட்டர் குடிநீர் பாட்டிலை இணையதளம் மூலம் ஏலத்தில் விட அந்நிறுவனம் முடிவு செய்தது.
அடிப்படை விலையான 1 1/2 திர்ஹம் என்ற அளவில் இருந்து தொடங்கிய இந்த ஏலம், கடந்த (மே) மாதம் 9ம் தேதி நிலவரப்படி 5 ஆயிரம் 500 திர்ஹம் என்ற நிலையை எட்டியுள்ளது.
ஜூன் 30ம் தேதி வரை ஏலம் தொடரும் என்பதால் ஏலத்தின் இறுதி தொகை 7 ஆயிரம் திர்ஹத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு திர்ஹம் என்பது இந்திய மதிப்பிற்கு சுமார் 16 ரூபாய் ஆகும். உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட குடிநீர் இதுவாக தான் இருக்கும் என ஏல நிறுவனத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்

Post a Comment