Header Ads



முஸ்லிம் வாலிபர் ஒன்றிய ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விஷேட செயலமர்வு


நாடலாவிய ரீதியில் தேர்வு செய்யப்பட்ட 27 உலமாக்களுக்கான விஷேட செயலமர்வு ஒன்றினை இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் AMYS 2அதனது தலைமையகத்தில் ஒழுங்கு செய்திருந்தது.

நவீன சவால்களை முறியடித்து அதற்கமைவாக அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வகையில் உலமாக்கள், தங்களது குத்பா மேடைகள்,கருத்தரங்குகள்,செயலமர்வுகள்,சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புகளை திறன் பட அமைத்து கொள்ளும் பொருட்டு presentation skill   எனும் கருப்பொருளில் இச்செயலமர்வு நடைபெற்றது.

இம்மூன்று நாள் வதிவிட கருத்தரங்கு செயன்முறைகளுடன் கூடிய பயிற்சி நெறியாக அமைய பெற்றது சிறப்புக்குரியதாகும், மேலும்; இப்பயிற்ச்சி நெறியானது தொடர்பாடல் திறன், தலைமைத்துவஆற்றல் , ஒழுங்கமைத்தல் படிமுறை ,காட்சிப்படுத்தலின் நுட்பங்கள் , உடல் மொழியை (body language) ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல் போன்ற விடையங்களை உள்ளடக்கியிருந்தது.



1 comment:

  1. pinnaal irukkum poster etho sawoodi arebiawai thirupthip padutthum 'salafi' cheyalpaattaik kaatukirathe! kawanikkawum..

    ReplyDelete

Powered by Blogger.