அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் சமூகசேவையாளர் பாராட்டுவிழா
(கே.சி.எம்.அஸ்ஹர்)
அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் அம்பாரை மாவட்டக்கிழையின் 34 வருட நிறைவையொட்டி 34 சமூக சேவகர்களையும்,40 வருடங்களாக சமூகசேவையில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டு வரும் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதித்தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை அவர்களையும் பாராட்டிக்கௌரவிக்கும் விழா 09.06.13 அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.அதிதிகள் பேன்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டனர் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் என்.எம்.அப்துல்லா அவர்களும்,நட்சத்திர அதிதிகளாக நபீல் பௌண்டேசன் தலைவர் என்.எம்.நபீல் அவர்களும்,முஸ்லிம் லீக்கின் தேசியத்தலைவர் சட்டத்தரணி றசீட் எம் இம்தியாஸ் அவர்களும் ;கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் எ.எல்.எம். ஹாசிம் அவர்களும், ஹனிபா பிரதேசசெயலாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
விழாவில் சான்றிதழ்கள், நினைவுச்சின்னங்கள், வழங்கப்பட்டதுடன்,பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன.விழாவின் ஞாபகார்த்தமாக மூன்று மலர்களும் வெளியிட்பட்டன. விழாவில் உரையாற்றிய அதிதிகள் அனைவரும் சமூகசேவையின் பெறுமானத்தையும்,உயர்வையும் பற்றிப்பெரிதும் பாராட்டிப்பேசினர்.


Post a Comment