ஏறாவூரில் ஒலிம்பிக் நிகழ்வு
(எம்.எஸ்.எம். நௌஸாத்)
2013 ஒலிம்பிக் தினம் இம்முறை ஏறாவூரில் 21.06.2013 இல் இவ் நிகழ்வு இடம் பெறவுள்ளது. இதில் இலங்கையைச்சேர்ந்த ஒலிம்பிக் சாதனையாளர்கள் மற்றும் ஒலிம்பிக் பங்குபற்றுனர்கள் இந் நிகழ்விற்கு வருகை தரவுள்ளனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல கோட்டத்தில் இருந்தும் 1000 பாடசாலை மாணவர்கள் அடங்களாக இவர்களுடன் இணைந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும் இதில் ஏறாவூர் நாளா திசைகளில் இருந்தும் இம் மாணவர்கள் ஊர்வளமாக வருகை தந்து ஏறாவூர் பிரதான வீதில் அமைந்துள்ள மணிக்கூட்டு சந்தியை வந்தடைந்து புன்னக்குடா வீதி ஊடாக ஊர்வளமாக தீபந்தத்தை ஏந்திச் செல்வர்.
இதனை முன்னிட்டு முழு ஏறாவூர் நகரமும் புதுப் பொழிவுடன் காணப்படும்முகமாக ஏறாவீரில் உள்ள வீதிகள் ஆற்றங்கரையோரப்பகுதிகள் சிறுவர் பூங்கா என்பன பலமில்லியன் ரூபா செலவில் ஏறாவூர் நகர சபை புனர் நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றது

Post a Comment