அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் வதிவிட செயலமர்வு
(எம்.எம்.ஏ.ஸமட்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் வதிவிட செயலமர்வு பொத்துவிலில் நடைபெறவுள்ளது.
தேசிய சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இவ்விருநாள் வதிவிட செயலமாவானது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறைசார்ந்த ஊடகவிலாளர்களின் தொழில்வாண்மை விருத்தி தொடர்பான விரிவுரைகள் மற்றும் பயிற்சிகள் அடங்கியதாக அமையுமென தேசிய சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம். ஜஃபர் தெரிவித்தார். 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் பொத்துவில் அறுகம்பை ஹோட்டலில் நடைபெறவுள்ள இவ்விருநாள் செயலமர்வுக்கான ஏற்பாடுகளை அமைப்பின் செயலாhள் ஐ.எச்.ஏ. வஹாப் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment