Header Ads



அன்று பிரபாகரன் செயற்பட்டதைப் போன்று, இன்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போலவே மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை செயற்படுகின்றார். வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை வழங்க அவர் மறுத்தால் பிரபாகரனுக்கும் அவருக்கும் வித்தியாசமில்லாது போய்விடும். ஆயரின் செயல் எமக்குக் கவலையளிக்கிறது. இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

13ஆவது திருத்தம் கூட்டத்திலிருந்து காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்கிய பின்னர் நடத்தப்படும் வடக்குத் தேர்தலில், வடக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என மன்னர் ஆயர் இராப்பு ஜோசப் கூறியுள்ளார். இதுகுறித்து அரசின் கருத்து என்ன என ஊடகவிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு மக்களின் அரசியல், ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் அன்று பிரபாகரன் செயற்பட்டார். வடக்கு மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அவர் வழங்கவில்லை. அன்று பிரபாகரன் செயற்பட்டதைப் போன்றுதான், இன்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகிறார். அவர் இப்படிச் செய்தால் பிரபாகரனுக்கும் அவருக்கும் வித்தியாசமில்லை. அவரின் செயல் எமக்குக் கவலையளிக்கிறது என்றார். 

No comments

Powered by Blogger.