சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க அறிவுறுத்தல் பிரச்சாரம்
(J.M.HAFEEZ)
வடபகுதியில் யுத்த சூழல் மாறியதை அடுத்து சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாகவும் அதனைத் தடுக்கும் முகமாக முச்சக்கரவண்டிகளில் ஸ்டிகர்கள் மூலம் அறிவுறுத்தல் மேற்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2012 ம் ஆண்டு 256 பேர் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாகவும் இவர்கள் அனைவரும் 15 வயதிலும் குறைந்தவர்கள் என கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இவ்வருடம் முதல் நான்கு மாத காலத்தில் 68 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா திசாநாயக்கா துண்டுப் பிரசுரம் மற்றும் ஸ்டிகர் அறிவித்தல்கள் மூலம் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகம் தொடர்பான அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கும் வேலைத் திட்டமொன்றை 14-06-2013 ஆரம்பித்து வைத்தார்.
.jpg)
.jpg)
Post a Comment