Header Ads



புதிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படலாம் - துணைவேந்தர் இஸ்மாயில்

(எம்.வை.அமீர்)

இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாக பல்வேறுபட்ட  பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவைகளை நாங்கள் பார்க்கின்ற போது நமது சமுதாயம் பல்வேறுபட்ட புதிய புதிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் எதிர்காலத்தில்,  நமது நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் வியாபித்து காணப்படுகின்றன. ஒருசாரார் அராபிய வசந்தம் என்று அரபு நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதே போன்று சில நாடுகளில் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில் வர்த்தக மற்று ஏனைய போட்டி நிலையைத் தோற்றுவித்து நாடுகளுக்கிடையே மோதல்களை ஏற்படுத்த முற்படுகின்றனர். இந்த நிலையில்,இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய கல்விச்சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை   துணைவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில் வலியுறுத்தினார்.

சம்மாந்துறையில் இருந்து கடந்தவருடமும் இந்தவருடமுமாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான 110 மாணவர்களையும் 11 உயர் பதவிகளுக்கு தெரிவானவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு ஓன்று 2013.06.16 மாலை 3.30 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை  மண்ணும் மக்களும் மகிழ்வுறும் விழா 2013 தலைப்பில் 

‘இஸ்கொள்’சமூகசேவை அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற   இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட போலீஸ்மா அதிபர் பூஜீத் ஜெயசுந்தரவும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர், 

சம்மாந்துறையில் சிறந்த கல்வியின் ஊடாக பலர் பல்வறு பட்ட துறைகளில் சாதனைகள் படைத்துள்ளதாகவும் சிலர் எங்களை விட்டு மறைந்து விட்ட போதும் அவர்கள் செய்த சேவைகள் மறையாதுள்ளதகவும் விசேடமாக இஸ்மாயில்துரை அவர்கள் சேன நாயக்க சமுத்திரத்தின் நிர்மாணத்தின் போது ஆற்றிய பங்கு எங்கும் பேசப்படுவதாகவும்,  சட்டம் விளையாட்டு என சாதனைகள் நீண்டு செல்வதாகவும் குறிப்பிட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட விஞ்ஞான சேவைக்கான போட்டிப்பரிட்சையில் முதலிடத்தைப்பெற்ற சம்மாந்துறையை சேர்ந்த ஒருவரையும் கெளரவிக்க, ‘இஸ்கொள்’சமூகசேவை அமைப்பினர் இணைத்துக் கொண்டுள்ளதாயும் பாராட்டிய உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில் இது போன்ற தொழிற்பாடுகள் கல்வியாளர்களை மிகவும் ஊக்கப்படுத்தும் என்றும், உங்கள் முன் உள்ள சாதணை படைத்தோரை முன் உதாரனங்களாகக்கொண்டு செயட்பட்டல் இதைவிட பெரிய அடைவுகளை எட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.

ஒருமனிதன் அவனுடைய வாழ்க்கையில் எத்தகைய விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டு எத்தகைய விடயங்களுக்கு பெறுமானங்கள் கொடுக்க வேண்டும் எத்தகைய விடயங்கள் எங்களால் பெறுமானங்கள் கொடுக்கப்படாமல் இருக்கின்றன என சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய உபவேந்தர் கற்றோரும் நமது சமுகத்தில் இருக்கும்போது தான் நமது சமூகமும் பெறுமானம் உள்ள சமுகமாக திகழும் என்றும் தெரிவித்தார். இதனை கடந்த கால பல சம்பவங்கள் எங்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்வி ரீதியாக எத்தனையோ நாகரீகங்கள் எத்தனையோ நாடுகள் பல்வேறு பட்ட சமூகங்கள் பல்வேறுபட்ட அடைவுகளை அடைந்துள்ளதாகவும் கூறினார். கல்வி பெறுமானம் இழக்கின்ற போது எத்தனையோ நாடுகள் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

ஒரு விடயத்தைப்பற்றி விமர்சனங்கள்  வருகின்ற போது அவற்றை நாங்கள் எங்களுடைய உணர்வுகளாலோ அல்லது ஆக்ரோசமான சுலோகங்களாலோ அடைந்து  விட முடியாது. அவற்றை கல்வின் அல்லது அறிவின் ஊடாகவே அடையலாம்  என்பது சமகால வாதமாக இருப்பதாக கூறிய பேராசிரியர் இஸ்மாயில்  உதாரணமாக கூறுவதானால் கடந்த காலங்களில் எங்களுடைய பிரதேசங்களில் பல்வேறு பட்ட முரண்பாடுளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள்  ஏற்பட்டுள்ளது.

அவ்வப்போது எல்லாம் நாங்கள் எங்களுடைய ஆத்திரங்களை அல்லது எங்களுடைய வெளிப்பாடுகளை வீதிகளில் அல்லது நாங்கள் தொழில் செய்கின்ற இடங்களில் அல்லது பள்ளிவாசல்கள் ஊட்டக சில எழுச்சிகளைத்தான்  செய்து இருக்கின்றோமே தவிர அதனை ஏனைய மக்கள் உணரக்கூடிய வகையில் அல்லது அவர்களிடம் யதார்த்த பூர்வமான வகையில் சென்றடையக்கூடிய எது வித தாக்கத்த்யும் நாங்கள் செலுத்தத் வில்லை. என்னன்ன விடயத்துக்காக வேண்டி சமூகம் குரல் கொடுக்கின்றதோ அதனை இன்று குறிப்பிட்ட மட்டத்துடன் நிறுத்தி விட முடியாது.

இன்று சர்வ தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது . ஏனைய அறிவாற்றல்கள் வளர்ச்சியடைந்துள்ளன  அவற்றை நாங்கள் பல வடிவங்களில் ஏனைய சமூகங்களுக்கும் நாடுகளுக்கும் செலுத்த வேண்டிய ஊடகத்தின் ஊடாக செலுத்தப்படும் போது தான் அந்த பிரச்சினைகளுக்கான தெளிவை அல்லது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை அவர்களிடமிருந்து நாங்கள் பெற முடியும். அறிவினை பெற்ற சமூகத்தின் தேவைப்பாடு காலத்தின் தேவையாக உள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் பல்கலைகழகங்களுக்கு வரும் மாணவர்களுக்கு அவர்களது அறிவாற்றலை விருத்தி செய்வதற்காக பல்வேறு பட்ட வழிகளில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அறிவாற்றலை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது அரசு பல்வேறு பட்ட யுக்திகளை பயன்படுத்தி மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பைச் செய்கின்றபோதும் அவைகளை சரியான முறையில் பயன்படுத்துபவர்கள் மிகக்குறைவு என்றும் கூறினார்.

பல்கலைகழகங்களுக்கும் கலாசாலைகளுக்கும் தெரிவாகும் மாணவர்கள் அங்கு வழங்கப்படும் சகல வசதிகளையும் பயன்படுத்தி இந்த சமூகத்துக்கு பிரயோசனப்படக்கூடிய சிறந்த அறிவாற்றலையும் பெறவேண்டும் அப்போது தான் நமது சமூகத்துக்கு தேவையான சுமூகமான தீர்வை அல்லது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியும் என்றும் உபவேந்தர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.